வைகை ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

வைகை ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-05-06 20:46 GMT


வைகை ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசின் கவனம்

கள்ளழகர் வைகை ஆற்றிலே இறங்கி மக்களுக்கு அருளாசி வழங்கிய நிகழ்வின் போது 3 பேர் நீரிலே மூழ்கி உயிரிழந்த வருந்தத்தக்க நிகழ்வு நடைபெற்று இருக்கிறது. மேலும் ஒருவர் மூச்சு திணறி இறந்ததாக தெரிகிறது..எனவே இவர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் உரிய இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும். சித்திரை திருவிழாவிற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து வைக்கப்பட்டது. ஆனாலும் அரசின் பாதுகாப்பு நடவடிக்கை குறைவாகத்தான் இருந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் தி.மு.க. அரசு சாதித்ததை காட்டிலும், சறுக்கியது தான் அதிகம் என்பது தான் இன்றைய எதார்த்தமான நிலையாக இருக்கிறது. தி.மு.க. முன்னுக்குப் பின் முரணாக முடிவெடுத்து, குளறுபடிகளின் மொத்த அடையாளமாக இருக்கிறது.

சாதனை

தமிழகத்தில் 12 மணி நேர வேலை மசோதாவை அறிவிப்பதும், எதிர்ப்பு வந்தவுடன் பின் வாங்கி உள்ளது. அதே போல் மதுபான விற்பனையை கல்யாண மண்டபங்களில் அறிவித்து விட்டு பின் வாங்கி இருக்கிறது. இது தான் தி.மு.க.வின் சாதனையாக உள்ளது. தமிழகம் முழுவதும் கஞ்சா நிறைந்து இருக்கிறது. மதுரையிலே வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி நடைபெறும் மாநில மாநாடு, இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்