வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- ஓபிஎஸ்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடனே வழங்கவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.;
சென்னை,
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை போல நாங்களும் ஒரு மாத சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்குவோம் என்று கூறிய அவர், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை என்றும் தெரிவித்தார்.