விபத்தில் இறந்த ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்திற்கு நிவாரண நிதி

விபத்தில் இறந்த ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.

Update: 2023-06-09 19:12 GMT

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 5-ந்தேதி அதிகாலை திருவண்ணாமலையில் இருந்து திண்டுக்கல் சென்ற வேன், முன்னால் சென்ற டிராக்டரை முந்தியபோது எதிர்பாராத விதமாக சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதியது. சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அரணாரையை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 45), காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ், ஆம்புலன்ஸ் மீது மோதியதில் டிரைவர் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் புதுப்பெண், முதியவர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் விபத்தில் உயிரிழந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரனின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை நேற்று கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்