வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
அரக்கோணம் பகுதிகளில் பெய்த மழையால் அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மைனாவதியின் வீட்டின் கூரை, ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதனை தொடர்ந்து அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா மற்றும் அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டு நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கிற்கு செலுத்திய ஆணையினை வழங்கினர்.
அதேபோன்று அரக்கோணம் அடுத்த பின்னாவரம் கிராமம் இருளர் பகுதியை சேர்ந்த வடிவேல் மனைவி மல்லிகா, முருகேசன் மனைவி சாந்தி ஆகியோரின் கூரை வீட்டின் ஒரு பகுதி சுவர் மழையின் காரணமாக இடிந்து விழுந்ததையும் உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோர் பார்வையிட்டு அவர்களுக்கான நிவாரணத் தொகை தலா ரூ.4100 வீதம் ரூ.8200 பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்திய ஆணையினை வழங்கினர்.