மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்
திருவாலி ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
சீர்காழி:
சீர்காழி அருகே திருவாலி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நொண்டி வீரன், அக்களூர் மாரியம்மன் ஆகிய கோவில்கள் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகி திருலோகசந்தர் தலைமை தாங்கி மேல்பாதி, திருவாலி, கீழ்பாதி, கீழச்சாலை, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பூங்கோதை, சின்னத்துரை, ஜோதி அம்மாள், ராஜேந்திரன், ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.