யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம் ? - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

பொதுமக்களுக்கு ரூ.6, 000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.

Update: 2023-12-13 11:02 GMT

சென்னை,

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.6,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.

இந்த நிலையில் , ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படுவது குறித்து இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது . அந்த அரசாணையில் ,

* சென்னையில் உள்ள அனைத்து வட்டங்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6,000 வழங்கப்படும்.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாக, திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கு வழங்கப்படும்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புத்தூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும் வழங்கப்படும்.

* திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும்.

*புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 2 நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து பொருட்களை இழந்தவர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் டோக்கன் வழங்கி நிதி வழங்கப்படும்.

*அரசு, பொதுத்துறை உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டிருந்தால் வங்கிக் கணக்கு விவரத்துடன் விண்ணப்பிக்கலாம்.

*விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் உரிய நிவாரணம் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

*தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படும்.

*நியாய விலைக்கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க காவல்துறையுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர், நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் உரிய எற்பாடுகளை செய்ய வேண்டும்.

*நிவாரணத் தொகை ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன்கள் நாளை முதல் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்