விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம், கருமாணிக்கம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

Update: 2023-01-03 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவாடானை தொகுதியில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால் நெற் பயிர்கள் கருகி பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கலெக்டரை நேரில் சந்தித்து பயிர் பாதிப்பு குறித்தும், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன். மேலும் பயிர் பாதிப்பு விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் ஒவ்வொரு கிராமம் வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றேன். அதற்கு கலெக்டர், மாவட்டத்தில் பருவமழை விவரங்களையும், நெற்பயிர் பாதிப்பு குறித்தும் அரசுக்கு தெரிவித்துள்ளோம். அரசிடம் இருந்து உரிய உத்தரவுகள் வந்தவுடன் ஆய்வு செய்து நெற்பயிர் பாதிப்பிற்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். திருவாடானை தொகுதி விவசாயிகள் பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை நேரில் சந்தித்து மனு அளிக்க வேண்டும். .அதன் அடிப்படையில்தான் அரசுக்கு சரியான புள்ளி விவரங்கள் அனுப்பப்படும் என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்