வெம்பக்கோட்டை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

வெம்பக்கோட்டை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2022-12-06 19:36 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

குடிநீர் ஆதாரம்

சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையில் தொடர்ந்து நீர்வரத்து காரணமாக நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் 18 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் இன்னும் அதிகரிக்கும் போது பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். இ்்ந்த தண்ணீர் வைப்பாற்றில் கலந்து இருக்கன்குடி அணையை சென்றடையும். விஜயகரிசகுளம், பாண்டியன் குளம் கண்மாயை நம்பி நெல், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர் வகைகள் 200 ஏக்கர் பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ளன.

பாசனத்திற்கு திறப்பு

கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாததால் பயிர்கள் வாட தொடங்கின. இதனால் வெம்பக்கோட்டை அணைக்கு வரும் உபரி நீரை விஜய கரிசல்குளம், பாண்டியன்குளம் கண்மாய்க்கு திறந்து விட வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வெம்பக்கோட்டை அணையில் காயல்குடி ஆறு இணையும் இடத்தில் தடுப்பணையில் உள்ள மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பாசனத்திற்கு தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றி கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்