குமரியில் பரவலாக மழை:பேச்சிப்பாறை அணையில் இருந்து 534 கனஅடி தண்ணீர் திறப்பு

குமரியில் பரவலாக மழை பெய்வதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 534 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2023-02-01 18:15 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி, சாமிதோப்பு, ஆரல்வாய்மொழி, தோவாளை, தக்கலை, கோழிப்போர்விளை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும் மலையோர பகுதி மற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் சாரல் மழையாக நீடித்தது.

இந்த மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 375 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 90 கனஅடி தண்ணீரும் வந்தது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 534 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 450 கனஅடி தண்ணீரும் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்