சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலைமறியல்

சீர்காழி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-01-05 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாவில் சந்தேகம்

கொள்ளிடம் ஒன்றியம் கூத்தியம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வைரவன் இருப்பு கிராமத்தை சேர்ந்தவர் அமுதன். இவரது மகள் சுகன்யா (வயது 24). இவர் நேற்றுமுன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதுகுறித்து சுகன்யாவின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாலைமறியல்

நேற்று சுகன்யாவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தைச்சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சீர்காழி அரசு ஆஸ்பத்திரி முன்பு சீர்காழி- சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சுகன்யாவின் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் சுகன்யாவின் சாவிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்