உரிய சிகிச்சை அளிக்கவில்லை என கூறி உறவினர்கள் போராட்டம்

பாம்பு கடித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த வாலிபர் உயிரிழந்தார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-29 17:32 GMT


பாம்பு கடித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த வாலிபர் உயிரிழந்தார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிகிச்சை

நாகை மாவட்டம் திருமருகல் வள்ளுவன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் நெடுமாறன்(வயது32). ஆசிரியர் பட்டய படிப்பு படித்துள்ள நெடுமாறன் தற்போது விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி மாலை பருத்தி வயலுக்கு சென்ற நெடுமாறனை பாம்பு கடித்தது.இதைத்தொடர்ந்து நெடுமாறன் உடனடியாக திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உரிய மருந்துகள் இல்லாததால் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நெடுமாறன் நேற்று அதிகாலை சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போராட்டம்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் தான் நெடுமாறன் இறந்ததாக கூறி ஆஸ்பத்திாி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆஸ்பத்திாி வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து நெடுமாறனின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக்கொண்டு திருமருகலுக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்