மழைக்காலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை

மழைக்காலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நடந்தது.

Update: 2022-09-02 09:13 GMT

மழைக்காலங்களில் நீர் நிலைகள், வீடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பது குறித்தும், முதலுதவி சிகிச்சைகள் அளிப்பது குறித்து தீயணைப்பு, பேரிடர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்தது.

ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், பொத்தேரி ஏரியில் செங்கல்பட்டு சப்-கலெக்டர் சஞ்சீவனா தலைமையிலும் நடைபெற்றது.

இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் வெள்ள மீட்பு ஒத்திகை பயிற்சியை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். இதனைதொடர்ந்து குன்றத்தூர் வட்டம் வரதராஜபுரம், மகாலட்சுமி நகர் பகுதியில் முன்னெச்சரிக்கை செய்து அந்த பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் ஒத்திகை பயிற்சி ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. சைலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்