மக்களின் வாழ்வாதாரம் குறித்து மலைக்கிராமங்களில் ஆர்.டி.ஓ. ஆய்வு
போடி அருகே மக்களின் வாழ்வாதாரம் குறித்து மலைக்கிராமங்களில் ஆர்.டி.ஓ. ஆய்வு செய்தார்
போடியை அடுத்த அகமலை அருகே உள்ள மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் குறித்து நேரில் ஆய்வு செய்யுமாறு கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். அதன்படி உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா அந்த பகுதியில் உள்ள மலைக்கிராமங்களுக்கு ஜீப் மூலம் சென்றார். பின்னர் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மலைப்பகுதியில் நடந்து அகமலை கிராமத்திற்கு சென்றார்
இதையடுத்து கரும்பாறை, குறவன் குழி மலைப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் தங்களுக்கு மாற்று இடம் கோரி ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தனர். பின்னர் கண்ணக்கரை பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது போடி தாசில்தார் செந்தில் முருகன், துணை தாசில்தார் கணேஷ்குமார் மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.