செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

வருசநாடு அருகே செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2023-08-18 18:45 GMT

வருசநாடு அருகே கோரையூத்து கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிசியுடன் குறிப்பிட்டு அளவு செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்பட்டது. இதனை வாங்கிய பொதுமக்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என நினைத்து அச்சமடைந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கோரையூத்து கிராமத்தில் ஆய்வு நடத்தினர்.

அப்போது ரேஷன் கடையில் வழங்கப்பட்டது செறிவூட்டப்பட்ட அரிசி என உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோரையூத்து கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது அந்த அரிசி எவ்வாறு தயார் செய்யப்படுகிறது, அதை உண்ணுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள், அதில் அடங்கியுள்ள சத்துகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். மேலும் ரேஷன் கடைகளில் வழங்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை வாங்கி எந்த பயமும் இன்றி சமைத்து உண்ணுமாறு தெரிவித்தனர். இதேபோல் கோம்பைத்தொழு, குமணன்தொழு உள்ளிட்ட கிராமங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்