திருமணம் செய்ய மறுப்பு: காதலன் வீடு முன்பு பட்டதாரி பெண் தர்ணா-சேலத்தில் பரபரப்பு

சேலத்தில் காதலித்து திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் காதலன் வீடு முன்பு பட்டதாரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2022-11-20 20:59 GMT

காதல்

ஆத்தூர் உடையார்பாளையம் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 28). பட்டதாரியான இவருக்கும், சேலம் பச்சப்பட்டி பேச்சியம்மன் நகரை சேர்ந்த கோகுல் (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர்.

இதனிடையே, திருமணம் செய்து கொள்வதாக கூறி சுகன்யாவிடம் கோகுல் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கோகுல் மறுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா இதுபற்றி ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்ணா

இந்த நிலையில், சேலம் பச்சப்பட்டியில் உள்ள காதலன் கோகுல் வீட்டிற்கு நேற்று மதியம் சுகன்யா திடீரென வந்தார். பின்னர் அவர் தனது காதலனுடன் திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுகன்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அவர்கள் டவுன் மகளிர் போலீசார் மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து சுகன்யா டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் காதலித்து திருமணம் செய்ய கோகுல் மறுப்பு தெரிவிப்பது ஏன்? அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்