தலித் மாணவர்களுக்கு திண்பண்டங்கள் மறுப்பு; திருப்பி அனுப்பிய கடை உரிமையாளர்- காரணம் என்ன..?

தலித் மாணவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-09-17 04:23 GMT

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் என்ற கிராமம் உள்ளது . இந்த கிராமத்தில் வசிக்கும் இரு சமூகத்தினரிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக இரு தரப்பினரும் கரிவலம்வந்த நல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதில் ஒரு தரப்பினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தலித் மாணவர்கள் அங்குள்ள பெட்டிக்கடையில் திண்பண்டங்கள் வாங்க சென்றனர். ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும் இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம். இனி பொருட்கள் தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள் என கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராமச்சந்திர மூர்த்தி என்ற நபரை கரிவலம்வந்த நல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்