கஞ்சா பதுக்கிய 5 பேருக்கு ஜாமீன் மறுப்பு
கஞ்சா பதுக்கிய 5 பேருக்கு ஜாமீன் மறுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;
மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த சுந்தர பாண்டியன், ஜெயபிரகாஷ், பாக்கியராஜ், இளங்கோ, குமார் ஆகிய 5 பேரும் சட்டவிரோதமாக 240 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக, கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் 5 பேரும், தங்களுக்கு ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதி, 2 மாதத்தில் மனுதாரர்கள் மீதான வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். மனுதாரர்களுக்கு ஜாமீன் அனுமதிக்க முடியாது என்று கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.