இளஞ்சிறார்களுக்கான புத்துணர்வு சுற்றுலா
இளஞ்சிறார்களுக்கான புத்துணர்வு சுற்றுலாவை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இளஞ்சிறார்களுக்கான புத்துணர்வு சுற்றுலாவை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலா துறையும் இணைந்து ஆரம்ப கால பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் இளஞ்சிறார்களுக்கான ஒருநாள் புத்துணர்வு சுற்றுலா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலிருந்து 53 இளஞ்சிறார்கள் சுற்றுலா புறப்பட்டனர்.
வேலூர் கோட்டை, அமிர்தி விலங்குகள் சரணாலயம் மற்றும் பொற்கோவில் ஆகிய இடங்களுக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் பெற்றோர்கள், 12 சிறப்பாசிரியர்களும் அழைத்து செல்லப்பட்டனர். சுற்றுலா பஸ்சை கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கமணி, மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் அஸ்வினி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.