ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு கூட்டம்
ரெட்டியார்சத்திரம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.;
ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வரவேற்றார். இதில், ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில், அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு அலுவலகத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு ரூ.13 லட்சம் பொது நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் நன்றி கூறினார்.