மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-01-26 22:28 GMT

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இந்த தண்ணீர் திறப்பு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது பாசன பகுதிகளில் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருவதால் தண்ணீர் தேவை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த வாரம் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை மேலும் குறைக்கப்பட்டு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று நிலவரப்படி அணை நீர்மட்டம் 104.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 885 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

மேலும் செய்திகள்