பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் குறைப்பு

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டது

Update: 2023-05-29 19:51 GMT

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்கள் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிக்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசன பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 800 கனஅடியாக குறைக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 82.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 393 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிக்கு வினாடிக்கு 800 கன அடியும், குடிநீருக்காக வினாடிக்கு 150 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 955 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்