மறுசுழற்சி செய்யும் வகையில் குப்பைகளை சேகரிக்க 18 மையங்கள்

நாகையில் மறுசுழற்சி செய்யும் வகையில் குப்பைகளை சேகரிக்க 18 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என நகரசபை தலைவர் மாரிமுத்து கூறினார்.

Update: 2023-05-21 19:15 GMT

நாகையில் மறுசுழற்சி செய்யும் வகையில் குப்பைகளை சேகரிக்க 18 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என நகரசபை தலைவர் மாரிமுத்து கூறினார்.

குப்பை தொட்டிகள்

நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் மறுசுழற்சி செய்யும் வகையில் குப்பைகளை சேகரிக்க 4 வகையான குப்பைத் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாகை புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர் செந்தில்குமார், நகராட்சி பொறியாளர் விஜய் கார்த்திக், துப்புரவு ஆய்வாளர் சேகர் ஆகியோர் 4 வகையான குப்பை தொட்டிகளை தூய்மை பணியாளர்களிடம் வழங்கினர்.

அப்போது நகராட்சி தலைவர் பேசியதாவது:-

மறுசுழற்சி மையம்

நாகை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வருகிற 5-ந் தேதி வரை பயனற்ற பொருட்களை மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில், ஆடைகள், பெட்ஷீட்கள், புத்தகங்கள், பழைய காலணிகள் மற்றும் உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்க நகராட்சி எல்லைக்குள் 18 இடங்களில் மறுசுழற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் எளிதாக குப்பைகளை தூய்மை பணியாளர்கள் பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்