கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்பு

கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய வாலிபர் ஆவடி மிட்டனமல்லி பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார்.;

Update: 2022-06-21 09:17 GMT

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் ஹரிஷ் (வயது 24). இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களோடு திருவள்ளூர் அடுத்த ஈக்காடு அருகே உள்ள புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் பூண்டி இணைப்பு கிருஷ்ணா கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நீரில் மூழ்கி மாயமானார். திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று ஹரிஷ் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆவடி மிட்டனமல்லி பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்