கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

Update: 2022-09-12 16:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே குண்டலப்பட்டியில் இந்து சமயஅறநிலையத்துறைக்கு சொந்தமான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஏலம் விடபபட்டது. அப்போது பங்கஜம் என்பவர் நீண்ட நாளுக்கு தனக்கு குத்தகைக்கு விட வேண்டும் என்று கோவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்து சமயஅறநிலையத்துறைக்கு சாதமாக தீர்ப்பு வந்தது. இதை தொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சீனிவாச ஆனந்த் தலைமையில் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் ஏலம் விடப்பட்டது. அப்போது 3 ஏக்கர் நிலத்தை பங்கஜம் என்பவர் ஆக்கிரமித்து வைத்து இருந்தார். மேலும் அவர் நீண்ட நாளுக்கு குத்தகைக்கு விட வேண்டும் என்று அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனார் கோர்ட்டு அவரது மனுவை தள்ளுப்படி செய்தது. இதை தொடர்ந்து அந்த இடம் மீட்கப்பட்டு விநாயகர் கோவிலுக்கு சொந்தமானது. இங்கு அத்துமீறி நுழையவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ கூடாது. மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்