ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் மீட்பு

கடன் வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் மீட்கப்படடது.

Update: 2022-08-23 17:16 GMT

வெளிப்பாளையம்:

கீழ்வேளூர் சோழவித்தியாபுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சிரில் சாம்சன் (வயது 30). சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு கடன் தருவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக பரிவர்த்தனை கட்டணமாக ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அந்த நபர் கூறியது உண்மை என்று நம்பிய சிரில் சாம்சன், அந்த நபர் கூறிய வங்கி கணக்குக்கு தவணை முறையில் ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் அனுப்பி உள்ளார். அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிரில்சாம்சன் நாகை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்தை மீட்டனர். பின்னர் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், சிரில்சாம்சனிடம் ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்