நாகர்கோவில் அருகே ரூ.2 கோடி கோவில் நிலம் மீட்பு

நாகர்கோவில் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்டு உள்ளது.

Update: 2022-11-23 21:37 GMT

ஆரல்வாய்மொழி:

நாகர்கோவில் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்டு உள்ளது.

கோவில் நிலம் மீட்பு

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் 42 சென்ட் நிலம் நாகர்கோவில் அருகே நீண்ட கரை கிராமத்திற்கு உட்பட்ட பழவிளை மற்றும் கார்த்திகை வடலி பகுதியில் சிலரால் ஆக்கிரமித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அறநிலையத்துறை தாசில்தார் சஜித், முப்பந்தல் கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் நடவடிக்கையின் பேரில் துறை நில அளவையர்கள் அஜித், ராகேஷ் ஆகியோரால் நிலம் அளந்து மீட்கப்பட்டது.

நடவடிக்கை

பின்னர் அதில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இந்த நிலம் உடனடியாக பொது ஏலம் மூலம் குத்தகைத்கு விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்