ரூ.10 கோடி ஆக்கிரமிப்பு நீர்நிலை நிலங்கள் மீட்பு

ரூ.10 கோடி ஆக்கிரமிப்பு நீர்நிலை நிலங்கள் மீட்பு

Update: 2022-06-29 18:20 GMT

காரைக்குடி

காரைக்குடி நகராட்சி எல்லையில் கோவிலூர் அருகே அரசு போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள அரசு புறம்போக்கு கண்மாய் பகுதியில் சிலர் வேலி அமைத்து சுமார் 10 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். ஐகோர்ட்டு வழிகாட்டுதலில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம் தலைமையில் மண்டல துணை தாசில்தார் யுவராஜா, தலைமை நில அளவர் பிச்சு மணி, சார் ஆய்வாளர் ராஜசேகர், வருவாய் ஆய்வாளர் மெஹர் அலி, கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் ஆகியோர் உரிய அளவீட்டுப்பணிகள் மேற்கொண்டு கண்மாயில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 10 ஏக்கர் நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.10 கோடியாகும்.

காரைக்குடி பகுதியில் தொடர்ந்து கோடிக்கணக்கான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்