ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலங்கள் மீட்பு

கிணத்துக்கடவில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலங்கள் மீட்கப்பட்டது.

Update: 2022-11-16 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலங்கள் மீட்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு நிலங்கள்

கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்மலை வேலாயுதசாமி கோவில் அருகே பொன்மலை கரடு பஸ் நிறுத்த பகுதியில் 14 சென்ட் நிலமும், சிவலோக நாதர் கோவில் அருகே உள்ள குட்டை பகுதியில் 11 சென்ட் நிலமும் என மொத்தம் 25 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வருவாய்த்துறையினர் நேரில் சென்று அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். மேலும் கம்பிவேலி அமைக்கப்பட்டது. இந்த பணிகளை கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, மண்டல துணை தாசில்தார் ராமராஜ், வருவாய் ஆய்வாளர் லலிதா, கிராம நிர்வாக அலுவலர் விமல் மாதவன் மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர்.

கம்பிவேலி

இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறியதாவது:-

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு ஒரு ஆணை வெளியிட்டது. அதில் மதிப்புமிக்க அரசு நிலங்களை பாதுகாத்து வைக்க வேண்டும், அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தால் அதை மீட்டு கம்பி வேலி அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதற்கு ஒவ்வொரு தாலுகாவிற்கும் தமிழக அரசு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக கிணத்துக்கடவு தாலுகாவில் பொன்மலை வேலாயுதசாமி கோவில் அருகே 2 இடங்களில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. கிணத்துக்கடவில் மேலும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மீட்கப்பட்டு கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்