பி.ஏ.பி. வாய்க்காலில் ஆண் பிணம் மீட்பு

பி.ஏ.பி. வாய்க்காலில் ஆண் பிணம் மீட்பு

Update: 2023-03-12 18:45 GMT

நெகமம்

நெகமத்தை அடுத்த தேவணாம்பாளையம் சென்னியப்ப நாடார் தோட்டம் அருகே உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் நெகமம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்