தர்மபுரியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்பிலான இடம் மீட்பு

கோர்ட்டு உத்தரவுப்படி ரூ.2.5 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.;

Update: 2023-02-21 01:35 GMT

தர்மபுரி,

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி, சொத்துக்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தர்மபுரியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4,095 சதுர அடி நிலத்தை குத்தகைக்கு எடுத்த சரவணன் என்பவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக 35 லட்சம் ரூபாய் வரிப்பணத்தை கட்டாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி ரூ.2.5 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்