ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்பு

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.;

Update: 2023-08-05 19:11 GMT

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்புடனர்.

ே.ஜி.ஏரி ஊர் தாமோதரன் நகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் மயானமாக பயன்படுத்தி வந்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த கமலநாதன் என்பவர் மயானத்தை ஆக்கிரமித்து விளைநிலமாக மாற்றி விட்டார். மயானம், விளைநிலமாக மாறியதால் தாமோதரன்நகரில் வசிக்கும் மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் தவித்து வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அணைக்கட்டு தாசில்தார் வேண்டாவிடம் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்ற தாசில்தார் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதிக்கு சென்று நிள அளவீடு செய்தார். அப்போது தனியார் ஆக்கிரமித்தது, அரசுக்கு சொந்தமான இடம் என தெரிய வந்தது. கமலநாதனிடம் ஆக்கிரமித்த இடத்தை காலி செய்யுமாறு பலமுறை எச்சரித்தும் அவர் காலி செய்யவில்லை எனத் தெரிகிறது.

இதற்கிடைேய நேற்று காலை வருவாய்த்துறையினர் மற்றும் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் நிரவல் செய்து மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தை தாமோதரன்நகர் பகுதி மக்கள் மீண்டும் மயானமாக பயன்படுத்தி கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்