திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான 85 ஏக்கர் நிலம் மீட்பு

சேரன்மாதேவி அருகே திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான 85 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

Update: 2023-07-28 19:48 GMT

சேரன்மாதேவி அருகே ஓமநல்லூர் சுப்பிரமணியபுரம் கிராமத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்த குத்தகைதாரர்கள், குத்தகை நெல் கொடுக்காமல் பாக்கி வைத்திருந்தனர்.

இதுதொடர்பாக நெல்லை வருவாய் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

நெல்லை தனித்துணை ஆட்சியர் உத்தரவுப்படி அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அதிகாரிகள், சேரன்மாதேவி தாலுகா வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஓமநல்லூர் சுப்பிரமணியபுரம் கிராமத்திற்கு சென்றனர். கோவிலுக்கு சொந்தமான 84.91 ஏக்கர் நிலத்தை மீட்டனர். மேலும் இதுதொடர்பான அறிவிப்பு பலகையும் அங்கு நிறுவப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்