கழிவறை ெதாட்டிக்குள் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
கழிவறை ெதாட்டிக்குள் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள கல்லூரணி கிராமத்தில் சேகர் என்பவரின் பசுமாடு கழிவறை தொட்டிக்குள் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அதிகாரி பிரகாஷ், குமரேசன் தலைமையிலான வீரர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது. இதே போல மறவமங்கலத்தில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த பாம்பை தீயணைப்பு படை வீரர்கள் லாவகமாக பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இளையான்குடியில் தீயணைப்பு நிலையம் அமைத்ததற்கும், மீட்பு பணியை துரிதப்படுத்தியதற்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.