போலி மதுபாட்டில்கள் பறிமுதல்
போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
மானாமதுரை.
மானாமதுரை சிப்காட் காவல்நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சுழியில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி சென்ற குழந்தைகள் நலத்் திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் செயல்படக்கூடிய வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 1,200 போலி மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக பட்டுக்கோட்டையை சேர்ந்த டிரைவர் கார்த்திகேயன் மற்றும் ஜெயவீரபாண்டியன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மகேஷ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.