கவுன்சிலருக்கு அபராதம் விதிக்க பரிந்துரை

கவுன்சிலருக்கு அபராதம் விதிக்க பரிந்துரை

Update: 2022-09-28 18:45 GMT

கோவை

கோவை ஒண்டிப்புதூர் எம்.ஆர். லே அவுட் பகுதியில் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொன்றை மரங்கள், 2 மற்றும் 15 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரங்கள் மற்றும் மகிழம்பூ மரம் ஆகியவை இருந்தன. இந்தநிலையில் இந்த மரங்கள் திடீரென்று வெட்டப்பட்டதை அறிந்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். எந்தவித அனுமதியும் பெறாமல் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தெற்கு தாசில்தார் சரண்யாவிடம் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து தாசில்தார் சரண்யா கூறும்போது, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்திதான் இந்த மரங்கள் வெட்டப்படுவதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. அவருக்கு அபராதம் விதிக்க கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்