மாற்றுத்திறனாளிகளுக்கு மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி தயார்

மாற்றுத்திறனாளிகளுக்கு மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி தயார்

Update: 2023-09-09 10:30 GMT

திருப்பூர்

மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் வாகன அங்காடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு மூன்று மதி அங்காடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான வாகனங்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளன.

மாற்றுத்திறனாளிகள் இந்த வாகனத்தை பெற்று மகளிர் சுய உதவி குழுவினர் தயாரிக்கும் பொருட்களை பெற்று விற்பனை செய்ய உள்ளனர். தகுதியான மாற்றுத்திறனாளிகளை மகளிர் திட்ட, திட்ட இயக்குனரால் தேர்வு செய்து வாகனங்கள் வழங்கப்பட உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்