திருஏடு வாசிப்பு விழா
பாவூர்சத்திரம் சுற்றுவட்டார தலைமைப்பதியில் அய்யா வைகுண்டரின் அகிலதிரட்டு திருஏடு வாசிப்பு விழா நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் சுற்றுவட்டார தலைமைப்பதியில் அய்யா வைகுண்டரின் அகிலதிரட்டு திருஏடு வாசிப்பு விழா தொடங்கியது. இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு அகிலதிரட்டு ஊர்வலம் குறும்பலாப்பேரி அய்யா தாங்கலில் புறப்பட்டு, பாவூர்சத்திரம் வந்தடைகிறது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டரின் பட்டாபிஷேக நிகழ்ச்சியும், 8 மணிக்கு அன்னதர்மமும் நடைபெறும். ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் சுற்றுவட்டார அய்யா வழி அன்புகொடி மக்கள் சேவா சபையினர் செய்து வருகின்றனர்.