சிவகாசி,
சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரி நூலகத்தின் சார்பில் வாசகர் வட்டம் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணா அசோக் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரியின் முதல்வர் சுதாபெரியதாய் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 7 மாணவிகள் புத்தக மதிப்புரையாற்றினர். அவர்களுக்கு கல்லூரியின் செயலர் அருணாஅசோக் சான்றிதழ் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நூலகர் யாஸ்மின், வாசகர் வட்டத்தின் உறுப்பினர்கள் வளர்மதி, பிரியதர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.