கிருதுமால் நதியில் மீண்டும் தண்ணீர் திறப்பு

கிருதுமால் நதியில் மீண்டும் தண்ணீ்ர் திறக்கப்பட்டது.

Update: 2023-01-04 19:02 GMT

காரியாபட்டி, 

வைகை அணையில் இருந்து மழைகாலத்தின்போது தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கட்டணூர், இருஞ்சிறை, மானூர், மறையூர், நரிக்குடி, வரிசையூர் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய்கள் பெருகின. மேலும் நரிக்குடி பகுதியில் கிருதுமால் நதி கால்வாய் இல்லாத பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் முழுவதும் கருகிவிட்டது. இதனால் இந்தப்பகுதியில் நிரம்பாத கண்மாய்களுக்கு குடிநீர் தேவைக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தனர். கிருதுமால் நதியில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும், பல்வேறு விவசாய அமைப்புகளும் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டியிடமும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கிருதுமால் நதி பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் வைகை அணையிலிருந்து திறந்து விட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் உத்தரவின் அடிப்படையில் கிருதுமால் நதியில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அப்போது நரிக்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் கண்ணன், விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்