நின்ற நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம்

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Update: 2023-07-05 21:17 GMT

சிவகாசி, 

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பெருமாள் கோவில்

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் 49-வது தலம் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா நாட்களில் இரவு பெருமாள், செங்கமலத்தாயார் ஆகியோர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தேரோட்டம்

இந்தநிலையில் நேற்று காலை 9.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன். மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், யூனியன் துணைத்தலைவர் விவேகன் ராஜ், தி.மு.க. மாநகர செயலாளர் உதயசூரியன், கவுன்சிலர்கள் அ.செல்வம், ஸ்ரீநிகா, சசிகுமார், துரைப்பாண்டி, மாரீஸ்வரி காளிராஜன், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் தேரை இழுத்தனர்.

பெண்கள் கோலாட்டம் ஆடிய படி தேருக்கு முன்னர் சென்றனர். தேர்திருவிழாவின் போது பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் செய்தனர். 2 மணி நேரத்திற்கு பின்னர் தேர் நிலைக்கு வந்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் தேவி செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்