போலி மதுபானம் தயாரிக்க வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள மூலப்பொருட்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே போலி மதுபானம் தயாரிக்க வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-11-09 10:37 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே போலி மதுபானம் தயாரிக்க வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் போலீசார் சோதனையின் போது, மோகன் என்பவரிடமிருந்து 350 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அந்த மதுபாட்டில்களை நுண்ணறிவு பிரிவு போலீசார் பரிசோதனை செய்தபோது, அந்த மதுபாட்டில்கள் போலி மதுபானங்கள் என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து மோகனிடம் விசாரணை மேற்கொண்டதில், இந்த மதுபாட்டில்கள் அனைத்தும் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பூபதி என்பவருடைய தென்னந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்தது.

இந்த தகவலின்பேரில் அங்குள்ள போலீசார் மதுரை மாவட்ட மதுவிலக்கு போலீசாருடன் சேர்ந்து மதுரை கொட்டாம்பட்டியில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள போலி மதுபானம் தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள், மதுபாட்டில்கள், ஸ்டிக்கர்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டு தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் பூபதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்