மாணவ-மாணவிகளிடம் சு.ரவி எம்.எல்.ஏ. குறைகேட்டார்

அரக்கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளிடம் சு.ரவி எம்.எல்.ஏ. குறைகேட்டார்.

Update: 2022-09-08 17:14 GMT

அரக்கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியை ராணிபேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், துணை கொறாடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து அனைத்து வகுப்புகளுக்கும் சென்று மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசுகையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திறக்கப்பட்ட இந்த கல்லூரியில் தற்போது 1,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். 72 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய கல்லூரியில் வெறும் 11 நிரந்தர பேராசிரியர்கள், 22 கவுரவ பேராசிரியர்கள் உள்ளனர். மேலும், 44 பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. மாணவ, மாணவிகள் இடைவிடாமல் கல்வி கற்க கல்லூரியில் எம்.பில்., பி.எச்.டி. போன்ற ஆராய்ச்சி படிப்புகள் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கக் கோரி, சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார். நெமிலி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலர்கள் ஏ.ஜி.விஜயன், அரக்கோணம் கிழக்கு பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்