பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக, இன்று ரேஷன் கடைகள் திறப்பு... ஈடாக 16ம் தேதி விடுமுறை
ரேஷன் கடைகளுக்கு இன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு ஈடாக 16ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் 2வது வெள்ளிக் கிழமை விடுமுறை விடப்படும். ஆனால், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது காரணமாக வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு இன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு ஈடாக 16ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜனவரி 27 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஜனவரி 16 விடுமுறை நாளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.