கூட்டுறவு பண்டக சாலையில் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஊட்டியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு பண்டக சாலையில் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஊட்டியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-10 18:45 GMT

ஊட்டி

கூட்டுறவு பண்டக சாலையில் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஊட்டியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

ஊட்டியில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ரேஷன் கடை பணியாளர்கள் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் தினேஷ்குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

ஊட்டி கூட்டுறவு பண்டக சாலை, தலைவர் ஆட்குறைப்பு என்ற பெயரில் அமுதவல்லி, ராமசந்திரன், அந்தோணிதாஸ் ஆகிய 3 நிரந்தர பணியாளர்களை பணி நீக்கம் செய்து 4 புதிய பணியாளர்கள் தேவைப்பட்டியல் கொடுத்து அறிவிப்பு செய்தது கண்டிக்கதக்கது.

இதுவரை நடவடிக்கை இல்லை

பண்டக சாலை மேலாளர் பணியாளர்களை மிரட்டும் தோரணையில் நடந்து கொள்கிறார். கட்டுப்பாடற்ற பொருட்களை விற்க சொல்லி வற்புறுத்துகிறார். பெண் பணியாளர்களுக்கு வெளியில் சொல்ல முடியாத நிலையில் தொல்லை ஏற்படுத்தி அதன் மூலம் பழிவாங்குகிறார்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகளிடம் நேரில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மேலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட விசாகா கமிட்டி ஏற்படுத்தியும் விசாரணை நடைபெறாமல் இதுவரை மவுனமாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதில், நிர்வாகிகள் பசுபதி, எட்வின், சங்கர், சதாசிவம், உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்