சென்னையில் ரேஷன் கடை ஊழியர்கள் இன்று காத்திருப்பு போராட்டம்

சென்னையில் ரேஷன் கடை ஊழியர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்

Update: 2022-06-10 03:05 GMT

கோப்புப்படம் 

சென்னை,

ஊதிய உயர்வு உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 7-ந்தேதி வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. சென்னை தவிர தமிழகம் முழுவதும் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இந்தநிலையில் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நேற்று நடந்தது.

இந்தநிலையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சென்னையில் ரேஷன் கடை ஊழியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தலைவர் ஜி.ஜெயச்சந்திர ராஜா, சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூறுகையில், 'சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதில் சத்துணவு, அங்கன்வாடி, துப்புரவு, 'டாஸ்மாக்' மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் (ஓ.எச்.டி.) உள்ளிட்ட பணியாளர்களுக்கு கலந்துகொள்ள இருக்கிறார்கள்' என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்