ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-10 18:50 GMT

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கருப்பையா தலைமை தாங்கினார். பட்டியல் இன பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க மறுப்பதை கண்டித்தும், பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவை தடுக்கவும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ரேஷன் கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக இந்த சங்கத்தை சேர்ந்த ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்