ரேஷன் கடையை பொதுமக்கள் திடீர் முற்றுகை

அத்தியாவசிய பொருட்களை முறையாக வழங்கக்கோரி மந்தாரக்குப்பத்தில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்

Update: 2023-07-26 18:45 GMT

நெய்வேலி

3 கடைகள்

மந்தாரக்குப்பம் தபால் நிலையம் அருகே ஒரே கட்டிடத்தில் ரேஷன் கடை எண்-1, 2, 3 ஆகிய 3 கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு கங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர், பட்டையர் காலனி, ஐ.டி.ஐ. நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 800 குடும்பத்தினர் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்கள் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை என்றும், ரேஷன் கடையை சரியாக திறப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

முற்றுகை

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த அப்பகுதிமக்கள் திடீரென ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். அப்போது அத்தியாவசிய பொருட்களை சரியாக வழங்க வேண்டும், உரிய நேரத்தில் ரேஷன் கடையை திறக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்