ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம்

கோவிந்தரெட்டி பாளையத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம்

Update: 2022-06-07 19:07 GMT

அடுக்கம்பாறை

வேலூர் மாவட்டம், ஊசூரை அடுத்த கோவிந்தரெட்டிபாளையம் ரேஷன் கடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆய்வு செய்தனர்.

அப்போது ரேஷன் அரிசி தரையில் சிதறி கிடந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டதற்கு மக்கள் பொருட்கள் வாங்கும்போது கொட்டும் அரசி கீழே சிதறிக் கிடக்கிறது என விற்பனையாளர் அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி நந்தகுமார் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

அதன்படி ரேஷன் கடை விற்பனையாளர் பழனியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்