கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கக்கோரி ரேஷன் கடை முற்றுகை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கக்கோரி ரேஷன் கடை முற்றுகையிடப்பட்டது.

Update: 2023-09-13 18:52 GMT

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஒரு ரூபாய் அனுப்பியவுடன் விண்ணப்பதாரர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் மகளிர் உரிமைத் தொகைக்காக தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறவில்லை என குற்றம்சாட்டி திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் ரேஷன்கடை முன்பு 20-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து அந்த பகுதி பெண்கள் கூறுகையில், உரிமைத்தொகை வழங்குவதற்காக ஏ.டி.எம்.கார்டு எங்கள் பகுதியில் 5 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. பாரபட்சமின்றி அனைத்து குடும்பங்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்