2 ரேஷன் கடைகள் திறப்பு

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்2 ரேஷன் கடைகள் திறப்பு விழாவில் சதாசிவம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

Update: 2023-05-09 20:04 GMT

மேட்டூர்

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் நவபட்டி கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை கட்டப்பட்டது. இதேபோல் கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி காட்டூர் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் இந்த 2 ரேஷன் கடைகளும் பயன்பாட்டுக்கு வராமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ.விடம் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ரேஷன் கடை குறித்த கோரிக்கையை வைத்தனர். இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ. சேலம் மாவட்ட கலெக்டர் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகளிடம் 2 ரேஷன் கடைகளையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தார்.

இதையடுத்து 2 ரேஷன் கடைகளையும் சதாசிவம் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், பா.ம.க. ஒன்றிய செயலாளர் ஆனந்த் பாபு, சுதாகர், லூதின்குமார், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்